ஒரு பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்! இறுதியில் நடந்த சோகம்!

தமிழகம்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள துப்புராயப்பேட்டை பகுதியை சார்ந்த 16 வயது சிறுவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அங்குள்ள சாரம் பகுதியை சார்ந்தவன் திலீப்குமார் (வயது 23).

இவர்கள் இருவரும் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி காரணமாக, அவ்வப்போது த.கராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், திலிப்குமார் சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து, நான் தான் சிறுமியை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் வீட்டிற்கு சென்ற சிறுவன் குடும்பத்தினரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். ஆ.த்திரமடைந்த குடும்பத்தினர் சிறுமியை அ.டித்து காதல் படிக்கும் வயதில் தேவையற்றது என கூறியுள்ளனர். இந்த விஷயம் திலிப்குமாருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் ஆ.த்திரமடைந்த திலிப்குமார் சிறுவன் மற்றும் அவனது நண்பர்களை காய்கறி மார்க்கெட் பின்புறத்திற்கு க.டத்தி செ.ன்றுள்ளார். அங்கு முன்னதாக தயார்படுத்தி வைத்திருந்த திலீப்பின் நண்பர்களான கார்த்திகேயன் (வயது 27), முகமது ரபீக் (வயது 26) ஆகியோர் சேர்ந்து சி.றுவனை அ.டித்து நி.ர்வாணப்படுத்தி எ.ச்சரித்து அ.னுப்பியுள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை க.டத்தி நி.ர்வாணப்படுத்தி து.ன்புறுத்திய திலிப்குமார், கார்த்திகேயன், முகமது ரபீக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.