சற்றுமுன்னர் முல்லைத்தீவில் குடும்பப் பெண்ணை மோ.தி தள்ளிய ராணுவ வாகனம்!

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் ராணுவ வாகனம் மோ.தியதில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராணுவ ஜீப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜீப் வாகன சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணமென சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதான வீதியில் வந்த மோட்டார் சைக்கிளை அவதானிக்காதவாறு சமிக்ஞையை ஒளிரவிடாது ஜீப் வாகனத்தை செலுத்த முற்பட்டதே குறித்த விபத்து இடம்பெற காரணமென சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஜீப் வாகனத்தில் நசியுண்டு கடும் சேதமடைந்ததுள்ளமை குறிப்பிடதக்கது.

சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு தெரியப்படுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தரவில்லை என மக்கள் கு.ற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.