கணவரின் வீட்டிற்குள் அனுமதிக்க கூறி, ஆறு வயது மகனுடன் போ.ரா.ட்.ட.த்.தி.ல் ஈடுபட்ட மனைவி..!

தமிழகம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை சார்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 38). இவர் எம்.பி.ஏ பட்டதாரி ஆவார். நாமக்கல்லில் இருக்கும் கோழிப்பண்ணையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.

இவரது முதல் கணவர் உ.டல்நலக்குறைவால் இ.யற்கையை எய்தவே, நாமக்கல் அருகேயுள்ள விட்டநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்த லாரி ஓட்டுநர் கருப்பண்ணன் (வயது 40) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தம்பதிகள் இருவரும் நாமக்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் 6 வயதுடைய மகன் இருக்கிறான். கருப்பண்ணன் பெயரில் இருக்கும் சொத்தை, அவரது சகோதரரின் பெயருக்கு மாற்றி எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை எ.தி.ர்.த்.து சண்முகப்பிரியா த.ட்.டி.கே.ட்.க.வே, த.ம்பதிகளுக்கு இ.டையே க.ரு.த்.து வே.று.பா.டு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தாயாரின் வீட்டிற்கு சென்ற கருப்பணன், மனைவியிடம் செலவுக்கு பணம் கொடுக்காமல், அவரை சந்திக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று தனது மகனுடன் கணவரின் வீட்டிற்கு சென்ற சண்முகப்பிரியா, த.ர்ணா போ.ரா.ட்.ட.த்.தி.ல் ஈ.டுபட்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் காவல் உதவி ஆய்வாளர் தங்கம் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பெண்மணியை வீட்டிற்குள் அனுமதி செய்ய வழிவகை செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் ப.ர.ப.ர.ப்.பு ஏ.ற்பட்டது.