நடிகர் ‘சூர்யா’விற்கு கொரோனா!

நடிகர் சூர்யா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலானது உலகம் முழுவதும் வாட்டி எடுத்த நிலையில் இந்தியாவில் ஓரளவு உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும் அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் சில முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் உயிரிழக்க நேரிட்டது. தமிழ்த் திரையுலகிலும் சில உயிரிழப்புகள் ஏற்படுத்தியது.

தற்போது தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பு, தியேட்டர் திறப்பு என ஓரளவு சினிமா பணிகள் தொடங்கிய நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததாகவும் தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவில், “’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என தெரிவித்துள்ளார்.