அந்த பிரபல சீரியல் நிறுத்தப்படுகிறதா.!? வெளியான தகவல்.!

சித்தி

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக இருப்பர். ஒரு எபிசோட் கூட தவற விடாமல் மிகவும் ஆர்வத்துடன் கூர்ந்து கவனித்து வருவது வழக்கம்.

இதுபோல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அதிக ரசிகர்களை கொண்டு வரவேற்பு பெற்ற சீரியல் சித்தி. தற்போது அதன் இரண்டாவது பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அத்துடன் இந்த தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது.

எனவே, மேலும் மேலும் இந்த தொடருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் வர இருப்பதால் நடிகை ராதிகா சரத்குமார் படிப்படியாக சினிமாவில் இருந்து விலகி முழுவதும் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார்.

இதனால் சித்தி 2 சீரியல் நிறுத்தப்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், இதுகுறித்து ராதிகா இந்த தொடர் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளார்.