இன்றைய ராசிபலன்: 10.2.2021: தை மாதம் 28ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

பிப்ரவரி 10,2021

இன்று!
சார்வரி வருடம், தை 28, 10.2.2021, புதன்கிழமை,
தேய்பிறை, சதுர்த்தசி திதி நள்ளிரவு 1:29 வரை,
அதன்பின் அமாவாசை திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 2:35 வரை,
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : திருவோண விரதம், மாத சிவராத்திரி

மேஷம் பக்தி


மேஷம்: அசுவினி: பேச்சுத் திறனால் எல்லா இடத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
பரணி: வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி ஏற்படும். செல்வம் சேரும்.
கார்த்திகை 1: வெற்றி காரணமாக உற்சாகமும், நிம்மதியும் வரும்.

ரிஷபம் அமைதி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பழைய பிரச்னைகளைத் தீர்த்து நிம்மதி அடைவீர்கள்.
ரோகிணி: பக்குவமாக நடந்து கொள்வீர்கள். வெற்றி பெறும் திறன் வரும்.
மிருகசீரிடம் 1,2: பொறுமையைக் கட்டாயம் கைக்கொள்ள வேண்டும்.

மிதுனம் சிரமம்

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: பேச்சிலும், செயலிலும் மிகுந்த கவனம் தேவை.
திருவாதிரை: யாரைப் பற்றியும் யாரிடமும் எந்த வம்பும் பேச வேண்டாம்.
புனர்பூசம் 1,2,3: பெண்களுக்கு பக்தி செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கடகம் அசதி

கடகம்: புனர்பூசம் 4: விஷயங்களை நன்கு கையாண்டு பிறருக்கு நன்மை செய்வீர்கள்.
பூசம்: ஆன்மிக நாட்டம் கூடும். உழைப்புக்கு மிஞ்சிய வருமானம் உண்டு.
ஆயில்யம்: பணியாளர்களுக்கு மேலிடத்தில் இருந்து நல்ல செய்தி வரும்.

சிம்மம் களிப்பு

சிம்மம்: மகம்: இன்று வரும் செய்தியால் மகிழ்ச்சி ஏற்படும். சுபச்செலவு கூடும்.
பூரம்: பணவரவும், செலவுகளும் உண்டு. பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள்.
உத்திரம் 1: மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்திக்க வாய்ப்பு வரும்.

கன்னி நஷ்டம்

கன்னி: உத்திரம் 2,3,4: மின் சாதனங்கள் வாங்குவீர்கள். கலையில் ஆர்வம் வரும்.
அஸ்தம்: கூடுதல் முயற்சியால் எடுத்த செயலில் வெற்றி பெறுவீர்கள்.
சித்திரை 1,2: இளைஞர்கள் தங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேறுவர்.

துலாம் சோர்வு

துலாம்: சித்திரை 3,4: வளர்ச்சி மேலோங்கும். உடல் அசதி அதிகரிக்கக்கூடும்.
சுவாதி: மனதில் உற்சாகம் அதிகரித்து அது செயல்களில் வெளிப்படும்.
விசாகம் 1,2,3: அநாவசியப் பகை வளராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம் வரவு

விருச்சிகம்: விசாகம் 4: அலைபேசியில் கேட்கும் செய்திகளால் நன்மை விளையும்.
அனுஷம்: நண்பர்களால் சேமிப்பு கரையும். பயணம் மகிழ்ச்சி தரும்.
கேட்டை: எதிர்காலத்துக்கு உதவும் வகையில் நல்ல சந்திப்பு கிடைக்கும்.

தனுசு ஊக்கம்

தனுசு: மூலம்: சற்று அதிகப் பொறுமை தேவை. புதிய பங்குதாரர்கள் இணைவர்.
பூராடம்: குடும்பத்தில் மூத்தவர் உடல்நலத்தில் மேம்பாடு இருக்கும்.
உத்திராடம் 1: நிதி நிலவர நன்மைகள் நிகழ்வதற்கான அறிகுறி தென்படும்.

மகரம் அலைச்சல்

மகரம்: உத்திராடம் 2,3,4: உற்சாகம் அடைவீர்கள். விட்டுக் கொடுத்து வெல்வீர்கள்.
திருவோணம்: தாயின் வருத்தம் நீங்கும். பிள்ளைகள் வெற்றி பெறுவர்.
அவிட்டம் 1,2:. வேலை மாறுவது பற்றிய சிந்தனை இப்போதைக்கு வேண்டாம்.

கும்பம் கோபம்

கும்பம்: அவிட்டம் 3,4: பிள்ளைகளின் முயற்சி நிறைவேறும். அரசால் நன்மை வரும்.
சதயம்:. தாயாருக்கும் உங்களுக்கும் இடையே உறவு சீராகி நிம்மதி தரும்.
பூரட்டாதி 1,2,3: மனம் சந்தோஷப்படும்படியான சம்பவங்கள் நடைபெறும்.

மீனம் பாராட்டு

மீனம்: பூரட்டாதி 4: மனக்குழப்பங்கள் அகலும். எதிரிகள் மனம் மாறுவர்.
உத்திரட்டாதி: நீங்கள் மதித்துப் போற்றும் நபர்களின் அன்பு கிடைக்கும்.
ரேவதி: குடும்ப நபர்களின் எண்ணிக்கை கூடும். எதிர்பார்த்த லாபம் வரும்.