கணவன், பிள்ளை வேண்டாம்.. வீட்டிலேயே இருந்துவிடுகிறேன் – மனைவியின் விபரீத முடிவு.!

தமிழகம்


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் அருகேயிருக்கும் சேருவாவிடுதி செட்டியார் தெரு பகுதியை சார்ந்தவர் போத்தியப்பன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வந்த வருகிறார். இவரது மகள் அருள்செல்வி (வயது 24). இவர் பட்டதாரி பெண் ஆவார்.

இவருக்கும், அதே பகுதியை சார்ந்த ராமய்யன் என்பவரின் மகன் முருகானந்தம் (வயது 35) என்பவருக்கும், கடந்த 4 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் தற்போது 3 வயதுடைய தன்ஷிகா என்ற குழந்தை இருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக மதுரையில் வசித்து வரும் தோழியின் திருமண விழாவிற்கு சென்று வருவதாக மதுரைக்கு புறப்பட்டு சென்ற அருள்செல்வி, பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பற்றிய தகவல் ஏதும் இல்லாததால், அருட்செல்வி மா.யமாகிவிட்டதாக முருகானந்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்த நிலையில், சேருவாவிடுதி பகுதியை சார்ந்தவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகேயுள்ள மருத்துவமனையில் பழக்கடை நடத்தி வருவதும், அருள் செல்வியும் – பழக்கடை நடத்தி வந்தவரும் காதலித்து தெரியவந்துள்ளது.

தற்போது, பழக்கடை உரிமையாளருக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், அருள்செல்வி தனது கணவர் மற்றும் குழந்தையை உதறித்தள்ளி முன்னாள் காதலனுடன் சென்று விட்டது தெரியவந்துள்ளது. பின்னர், காவல் துறையினர் அருள் செல்வியை அழைத்து விசாரணை செய்த நிலையில், எனக்கு கணவரும் – குழந்தையும் வேண்டாம். நான் எனது தோழியின் வீட்டிலேயே வசித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அருள் செல்வியின் உறவினர்கள் எவ்வுளவோ கூறியும் பெண்மணி மனம் மாறாததால், குடும்பத்தினர் மீண்டும் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால், முருகானந்தம் மிகுந்த ம.ன வ.ருத்தத்தில் இருந்து வருகிறார் என்றும் உறவினர்கள் வ.ருத்தம் தெரிவித்தனர்.