பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு என்ன தான் ஆச்சு..?! வெளியாகும் பல்வேறு காரணங்கள்.!

குமரன்
பிரபல சீரியல்களில் முக்கியமானதாக கருதப்படுவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பி கூட்டு குடும்ப பாசத்தை காட்டும் விதமாக இந்த தொடர் அமைந்திருக்கும் இது ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது.


தற்போது சில நாட்களாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதிர் கதாபாத்திரம் காட்டப்படவில்லை. இதனால், சமூக ஊடகங்களில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ஊருக்கு சென்று உள்ளார் என்றும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்றும் பல்வேறு விஷயங்களை வ.தந்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி பிரபலமான அஸ்வின் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக வெளியாகி ப.ரப.ரப்பை கிளப்பியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் விலகி வெள்ளிதுறையில் கால்பதிக்க இருப்பதாகவும், இதனால்தான் சமீபகாலமாக அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கவில்லை என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு சார்பாக இந்த வேடத்தில் குமரன் தான் மீண்டும் நடிப்பார் என்றும், அஸ்வின் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட தகவல் முற்றிலும் வ.தந்தி என்றும் தெரிவித்துள்ளனர்.