ஒரே பிரசவத்தில் நான்கைந்து குழந்தைகள்.. எதனால் சாத்தியம்?.. உண்மையான காரணம் என்ன?..!

Binovular Twins

சிறிய அளவிலான வித்தியாசம் கூட கண்டறிய இயலாத அளவில் பிறக்கும் இரட்டை குழந்தைகளை “யூனியோவளர்ட் டுவிங்ஸ்” (Uniovular Twins) என்று மருத்துவ உலகில் கூறுவார்கள். பெண்ணின் உடலில் பெலோப்பியன் குழாயில் இருக்கும் கருமுட்டையுடன் ஆணின் உயிரணு சேர்ந்து கரு உருவாகிய பின்னர், எதிர்பாராத வகையில் இரண்டாக உடையும் கரு, தனித்தனிக்கரு செல்லாக பிரிந்து வளர்ந்து இரண்டு குழந்தையாக உருவாகிறது.

கரு இரண்டாக உடைவதால் இரட்டை குழந்தைகள் உண்டானாலும், குழந்தைகளின் நிறம், உயரம், இரத்த வகை என அனைத்துமே ஒரே மாதிரி இருக்கும். சில சமயம் கரு உடைப்பில் சரியாக உடையாத பட்சத்தில், லேசாக ஒட்டியே குழந்தைகளின் கரு வளர்ச்சியடையும். இவ்வாறான ஒட்டிப்பிறக்கும் இரட்டை குழந்தைகள் “சயாமிஸ் ட்வின்ஸ்” (Siamese Twins or Conjoined Twins) என்று அழைப்பார்கள்.

இரண்டு குழந்தைகளும் எந்த அளவில் ஒட்டி உள்ளது என்பதை பொறுத்து, குழந்தைகளின் இதயம், சிறுநீரகம், கால்கள் போன்றவை வளர்ச்சியடையும். இதில், சரியான அளவிலான இடைவெளி இல்லாத பட்சத்தில் ஒரே இதயம், சிறுநீரகம், இரண்டு கால்கள் கொண்ட குழந்தைகள் பிறக்கிறது.

இரட்டையர்களின் சில நேரம் ஒரு குழந்தை ஆணாகவும், மற்றொன்று பெண்ணாகவும் இருக்கும். மேலும், ஒரு குழந்தை சிவந்த நிறத்திலும், மற்றொரு குழந்தை சம்பந்தமே இல்லாமல் கருப்பு நிறத்துடனும் பிறக்கும். இவ்வாறான இரட்டை குழந்தைகள் “பைனோவளர் டுவின்ஸ்” (Binovular Twins) என்று அழைப்பார்கள்.

உலகளவில் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களை விட, சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்கள் அதிகம். பெண்ணின் சினைப்பையில் கருமுட்டை வெடித்து ஒரேயொரு கருமுட்டை வெளியேறும். சில நேரங்களில் அபூர்வமாக இரண்டு கருமுட்டைகள் வெடித்து வெளியேறும் போது, ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக இணைந்து இரண்டு கருவாக மாறுகிறது.

ஒரே பிரசவத்தில் நான்கு முதல் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பிற்கு முக்கிய காரணமாக நவீன மருந்துகளின் விபரீதம் இருக்கிறது. குழந்தைகளின் பிறப்பிற்காக கருமுட்டையை வெடிக்க வைக்க செலுத்தப்படும் ஊசிகளால், ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகள் வெளியேறி நான்கு மற்றும் அதற்கும் மேற்பட்ட கருவை உருவாக்குகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.