பதிவு திருமணம் செய்து குடும்பம் நடத்தி, 24 வயது இளம் பெண்ணை ஏ.மாற்றிச்சென்ற காதலன்..!

இந்தியா

நாமக்கல் மாவட்டத்தினை சார்ந்த 24 வயது இளம்பெண், சென்னையில் உள்ள திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகார் மனுவில், ” நாமக்கல்லில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் போது, எனக்கும் – உடன் பயின்று வந்த கவுதம் (வயது 24) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

நாங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், எங்களது பெற்றோருக்கு தெரியாமலேயே திருப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணமும் செய்துகொண்டோம். இதன்பின்னர், வேலை விஷயமாக சென்னைக்கு வந்த சமயத்தில், முகப்பேர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்தோம்.

இதற்குள்ளாகவே, 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கம் பணத்தை பெற்றுக்கொண்டு ஊருக்கு சென்ற கவுதம், சென்னை திரும்பவில்லை. அவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அ.திர்ச்சியடைந்த நான், முகநூல் வாயிலாக அவரின் நண்பரை தேடி, நாமக்கல்லில் இருக்கும் கவுதமின் குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு பேசினேன்.

முதலில் எங்களின் திருமணத்திற்கு ம.றுப்பு தெரிவித்தவர்கள், வ.ர.தட்சணையாக 50 சவரன் நகைகள் மற்றும் ரூ.10 இலட்சம் ரொக்கம் கொடுத்தால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவிக்கிறார்கள். பதிவு திருமணம் செய்துவிட்டு என்னை ஏ.மாற்றிச்சென்ற கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.