இன்றைய ராசிபலன்: 17.2.2021: மாசி மாதம் 5ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

பிப்ரவரி 17,2021


இன்று!
சார்வரி வருடம், மாசி 5, 17.2.2021, புதன்கிழமை,
வளர்பிறை, சஷ்டி திதி முழுவதும், அசுவினி நட்சத்திரம் நள்ளிரவு 12:08 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், மரண – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : சஷ்டி விரதம், முருகன் வழிபாடு.

மேஷம் தனம்

மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணிபுரியும் இடத்தில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் ஏற்படும். உடலில் ஒருவிதமான சோர்வினால் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உணர்ச்சிவசமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சிந்தித்து செயல்படவும்.

ரிஷபம் பரிசு

நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பை மேம்படுத்தும்.

மிதுனம் நலம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் முன்கோபமின்றி செயல்படுவது தேவையற்ற பகையை தவிர்க்க இயலும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். எதிர்பாராத பயணங்கள் மற்றும் செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கடகம் நட்பு

நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வாரிசுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு தொழில் தொடர்பான வாய்ப்புகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

சிம்மம் வெற்றி

உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

கன்னி லாபம்

புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட்டால் பலவிதமான மனக்குழப்பங்களை தவிர்க்க இயலும்.

துலாம் சுபம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் தனவரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும்.

விருச்சிகம் அமைதி

செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் உறவுகளின் மூலம் ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் மகிழ்ச்சி ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் அவ்வப்போது சிறு சிறு குழப்பங்களும், கவலைகளும் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு பாசம்

எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகள் ஈடேறும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் குடும்பத்தினருடன் முதலீடுகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து முடிவு காண்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களுக்கு சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும்.

மகரம் கவனம்

உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் நன்மையை அளிக்கும். உறவினர்களின் ஆதரவால் தனவரவுகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

கும்பம் பாராட்டு

திட்டமிட்ட காரியங்களை எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணைவரிடம் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பதற்கான தருணங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். நீண்ட தூர உறவினர்களின் சந்திப்பு மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம் ஆக்கம்

கடினமான செயல்களையும் எளிய முறையில் செய்து முடிப்பீர்கள். மூத்த சகோதரர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் மூலம் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், உங்களின் மீதான நம்பிக்கையும் மாறுபடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.