மீரா என்ற இளம் பெண்ணை நம்பி வாழ்க்கையை இழந்த 5 வாலிபர்கள்!

ரஜபுன்னிஷா

 

டிக் டாக்கை நம்பி பல இளம் பெண்கள் வாழ்க்கையை இழந்துள்ள நிலையில், ஒரு இளம் பெண்ணை நம்பி 5 வாலிபர்கள் வாழ்க்கையை இழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

டிக் டாக் உலகில் மீரா என்ற பெயரில் உலா வந்த ரஜபுன்னிஷா என்ற 40 வயது பெண்மணி, 4 இளைஞர்களை ஏமாற்றி ஐந்தாவதாக பார்த்திபன் என்பவருடன் வாழ தொடங்கியுள்ளார். முகநூலில் அறிமுகமாகிய பழக்கம் மூலமாக, அவரின் வீடியோவை பார்த்து சுயநினைவு இழந்த ஓட்டுனர் பாலமுருகன் என்பவர் தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும், நானும் உங்க ஜாதிதான் என்று ஏமாற்றிய ரஜபுன்னிஷா, தன்னை குறிப்பிட்ட சாதிப் என்று கூறி பாலகுருவுடன் பேசி வந்துள்ளார். பின்னர், காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில், அவரது உண்மையான பெயர் ரஜபுன்னிஷா என்றும், அவர் வேறு மதத்தை சார்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமல்லாது, பாலகுரு ஓட்டுனர் பணிக்கு சென்றதும், மீராவை சந்திக்க வேறு சில ஆண்கள் வந்து செல்லும் தகவலும் கிடைத்துள்ளது. விசாரணையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, தனது தாயின் வீட்டிற்கு செல்வதாக கூறி ரஜபுன்னிஷா சென்ற நிலையில், அவர் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற பாலகுரு, தன்னை ஏமாற்றி ஒரு பவுன் நகை மற்றும் ரூபாய் 70 ஆயிரம் ரொக்கம் பணத்தை தி.ருடிவி.ட்டு, வாழ்க்கையையும் கேள்விக்குறியாக மாற்றிவிட்டு ரஜபுன்னிஷா சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

மேலும், பாலகுருவை விட்டுவிட்டு பார்த்தீபன் என்பவருடன் தற்போது ரஜபுன்னிஷா வாழத்தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.