ரியல் எஸ்டேட் தொழிலதிபர், விவசாயி, பால் வியாபாரி… ஹெலிகாப்டர் வாங்கி வியப்பை ஏற்படுத்திய நெகிழ்ச்சி.!

ஜனார்த்தனன் போயர்

பொதுவாக விவசாயிகள் என்று கூறினாலே, பலருக்கும் அவர்களின் ஏழ்மை மற்றும் வறுமை நினைவுக்கு வரும். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இரண்டு சக்கர வாகனம் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் இன்றளவும் கடனில் தவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவாண்டி பகுதியை சார்ந்த விவசாயி மற்றும் பால் வியாபாரி ஜனார்த்தனன் போயர், ரூ.30 கோடி செலவில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். இவர் விவசாய தொழில் மட்டுமல்லாது நில விற்பனை மற்றும் கட்டுமான தொழிலையும் செய்து வருகிறார்.

பிவாண்டி பகுதியில் முக்கிய தொழிலதிபராக இருந்து வரும் ஜனார்த்தனன் அடிக்கடி குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு பயணம் செய்வது வழக்கம். தனது பயண நேரத்தை குறித்து, தொழில் வருமானத்தை பெருக்க ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார்.

ஹெலிபேடுக்காக வீட்டின் அருகே உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் பைலட் அறை, தொழில்நுட்ப அறை போன்றவற்றை அமைந்துள்ளார். இதனையடுத்து அந்த ஊர் முழுக்க ஜனார்தனனின் பெயர் மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.