ஷிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட்..! வெள்ளித்திரையில் கால்தடம்.!

ஷிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கலந்துகொண்டு பிரபலமான VJ புகழ் ஒரு சில திரைப்படங்களில் சமீபத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகினார். இத்தகைய சூழலில், அடுத்ததாக சிவாங்கியும் ஒரு திரைப்படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி என்ற திரைப்படம்தான் டான். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கும் நான்கு நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

இதில் சிவாங்கியும் இடம் பெற்று இருக்கிறார் என்பதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்படும் விஷயம். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை காட்டி வந்த சிவாங்கி முதல் முறையாக வெள்ளித்திரையில் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிக்க இருப்பது பெரும் சுவாரசியமான தகவலாக அமைந்துள்ளது.

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் குக் கோமாளி நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்று சிவாங்கியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.