இன்றைய ராசிபலன்: 18.2.2021: மாசி மாதம் 6ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

பிப்ரவரி 18,2021


இன்று!
சார்வரி வருடம், மாசி 6, 18.2.2021, வியாழக்கிழமை,
வளர்பிறை, சஷ்டி திதி காலை 8:26 வரை,
அதன்பின் சப்தமி திதி, பரணி நட்சத்திரம் நள்ளிரவு 2:43 வரை,
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை
பொது : குருவாயூரப்பன் வழிபாடு

மேஷம் சோர்வு

குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை வாங்கும் பொழுது தகுந்த ஆலோசனைகளை பெற்று முதலீடுகளை செய்யவும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம் நேர்மை

மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். முக்கிய முடிவுகளை அவசரமின்றி பொறுமையுடன் எடுப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். மனதில் தோன்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது. புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். நிர்வாகத்தில் இருப்பவர்களின் திறமைகள் வெளிப்படும். தந்தையிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்து கொள்ளவும்.

மிதுனம் சாதனை

பழைய கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபாரம் தொடர்பான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களை சந்திப்பீர்கள். காப்பீடு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.

கடகம் நிம்மதி

தாய்வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வீடு மற்றும் வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக இன்னல்கள் குறையும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவும், அறிமுகமும் கிடைக்கும்.

சிம்மம் நட்பு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மாறுபட்ட அணுகுமுறையால் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மற்றும் வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

கன்னி களிப்பு

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த செய்திகள் காலதாமதமாக கிடைக்கும். வாரிசுகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எண்ணங்களில் மாற்றமான சிந்தனைகள் பிறக்கும்.

துலாம் ஆதாயம்

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு மேம்படும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வும், குழப்பமும் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும்.

விருச்சிகம் அலைச்சல்

உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். துணிச்சலான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் உடல்நலனில் கவனம் வேண்டும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். அனுபவமிக்க வேலையாட்களை நியமிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களில் பொறுமை வேண்டும். பிரியமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.

தனுசு சிரமம்

நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான செயல்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தாருடன் மனம்விட்டு பேசுவதன் மூலம் மனதில் இருக்கும் கவலைகள் குறையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.

மகரம் பக்தி

அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கூட்டாளிகளின் ஆதரவின் மூலம் லாபம் மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிம்மதி உண்டாகும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்களில் இருந்துவந்த காலதாமதம் குறையும். மனதில் புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் மேம்படும்.

கும்பம் கீர்த்தி

மனதில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பதற்கான தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளை விரைந்து முடிப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பிரபலமானவர்களின் உதவிகள் மூலம் லாபம் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். பெரியவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் ஏற்படும்.

மீனம் பொறுமை

குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விமர்சனங்கள் ஏற்பட்டு மறையும்.