தோனியும், சாக்ஷியும் திருமண வீட்டில் உற்சாக நடனம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் வீரராக இருந்து, அதன் பின்னர் கேப்டனாக பணியாற்றியவர் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி. இவர் சமீபத்தில் தான் சர்வேதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவரை தொடர்ந்து ரெய்னாவும் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். அடுத்தடுத்து இருவரும் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவுடன் தங்களது அறிவிப்பை வெளியிட்டனர். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இத்தகைய சூழலில், தன்னுடைய குழந்தை மற்றும் மனைவி சாக்ஷியுடன் தோனி சந்தோஷமாக தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகின்றார். சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் டோனி தனது மனது சாக்ஷியுடன், சென்றிருந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தா திருமணத்தில் தோணி மற்றும் அவருடைய மனைவி இருவரும் இந்தி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடி வருகின்றனர். அத்துடன், அங்கிருந்த இளம்பெண்கள் பலர், மஹந்திர சிங் தோனியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.