இன்றைய ராசிபலன்: 19.2.2021: மாசி மாதம் 7ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

பிப்ரவரி 19,2021


இன்று!
சார்வரி வருடம், மாசி 7, 19.2.2021, வெள்ளிக்கிழமை,
வளர்பிறை, சப்தமி திதி காலை 10:33 வரை,
அதன்பின் அஷ்டமி திதி, கார்த்திகை நட்சத்திரம் அதிகாலை 5:13 வரை,
அதன்பின் ரோகிணி நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : சுவாதி
பொது : ரத சப்தமி, கார்த்திகை விரதம்.

மேஷம் சிக்கல்

தடைபட்ட உயர்கல்வியை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புத்திரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம் ஆதரவு

கால்நடைகளின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தொழில் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு தொழில் தொடர்பான ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கும்.

மிதுனம் தோல்வி

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி அடைவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரிகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

கடகம் அமைதி

கலைத்துறை சார்ந்த பிரிவுகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

சிம்மம் களிப்பு

கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான செயல்கள் நடைபெறும். புதிய துறைகளின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடம் மனம்விட்டு பேசுவீர்கள். வழக்குகள் தொடர்பான பணிகளில் திருப்பமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளின் மூலம் சில நுணுக்கங்களை அறிவீர்கள்.

கன்னி வெற்றி

உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மற்றவர்களை நம்பி புதிய முதலீடுகள் செய்வதில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். நெருக்கமானவர்களின் மூலம் மனவருத்தங்கள் ஏற்படும். செய்யும் முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும்.

துலாம் நட்பு

பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். கோபத்தை விடுத்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகளால் சேமிப்புகள் குறையும். புதிய முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்ய வேண்டும். பெரியவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பழைய நினைவுகளின் மூலம் சோம்பலும், ஒருவிதமான கவலைகளும் ஏற்பட்டு மறையும்.

விருச்சிகம் பாசம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமும், அறிமுகமும் உண்டாகும்.

தனுசு நன்மை

உயர் அதிகாரிகளினால் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். புதிய வீடு கட்டுவது தொடர்பான முயற்சிகள் மேம்படும். சிலருக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த சொத்துக்கள் கிடைக்கும்.

மகரம் நலம்

நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். திறமையான பேச்சுக்களின் மூலம் லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த சில பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை முடிப்பதில் சிறு காலதாமதங்கள் ஏற்படும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம் சுகம்

மனதில் எண்ணிய செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ப வாய்ப்புகள் கிடைக்கும். பள்ளி மற்றும் கல்லூரி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். பதவி உயர்வு தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் ஈடேறும்.

மீனம் உயர்வு

வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் ஒருமுறைக்கு இருமுறை விசாரிப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், பதவிகளும் மேம்படும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த வழக்கு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவு பெறும்.