இலங்கையில் கட்டுப்பாட்டை மீறிய கொரோனா தொற்று!

இலங்கையில்

கொவிட்-19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

ஜா-எல பகுதியில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பில் தரவு பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால் கடந்த மூன்று நாட்களாக கம்பஹா மாவட்டத்தில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும் கம்பஹா மாவட்டத்தில் அதிகமானோருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

வைத்தியசாலைகளுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக சென்றிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்றுறுதியானவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தொற்றுறுதியானவர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் தொற்றுறுதியானவர்கள் என கூறுகின்ற போதிலும் அவர்களுக்கு தொற்றுறுதியாவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.