காரில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண்..வீதியில் ஏற்பட்ட பரபரப்பு..!

காரில் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண் ..

கலிபோர்னியாவில் கொள்ளையனிடம் சிக்கிய தனது பணப்பையை மீட்க முயன்ற பெண் எதிர்பாராமல் காரில் சிக்கி தரதரவென இழுத்து செல்லப்பட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஓக்லண்ட் நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் காணப்பட்ட பணப்பையை பறித்த கொள்ளையன், காரில் தப்பி சென்றுள்ளான்.

அப்போது குறித்த பெண்ணின் கழுத்தில் பணப்பை சிக்கி கொண்டதால் அப்பெண் காரில் நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.