10 பேரை கடித்த கொடூர நாய் – பொலிஸாரின் துப்பாக்கியால் நடந்த விபரீதம்…

10 பேரை கடித்த கொடூர நாய்….

தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவரால் ரேபிஸ் நோய் கொண்ட நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் சூடு அருகில் இருந்த நபரொருவர் மீது பட்டதில் குறித்த நபர் காயமடைந்துள்ளார்.

குறித்த நாய் அந்த பிரதேசத்தை சேர்ந்த சுமார் 10க்கும் அதிகமானோரை கடித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

அதற்கமைய, இன்று (27) காலை 10.30 மணியளவில் ரேபிஸ் நோய் தொற்று கொண்ட நாய் தெற்கு களுத்துறை, வெட்டுமகட பிரதேசத்தில் உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, உப பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நாய் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், அங்கிருந்த நபரொருவர் மீதும் துப்பாக்கிச் சூடு தவறுதலாக பட்டதை தொடர்ந்து 60 வயதுடைய காயமடைந்த நபர் களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.