ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார்?வெளியான உண்மை…!

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்….

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு ,தேசிய புலனாய்வு பிரிவினரது பலவீனம், தாக்குதல் சம்பவத்துக்கு சாதகமாக அமைந்தது என்பதை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற மறுகணமே நாட்டு மக்கள் அறிந்துகொண்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின்அறிக்கை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் பேசிய அவர்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நாட்டு மக்கள் குறிப்பாக கத்தோலிக்க மக்கள் பெரும் எதிர்பார்ப்பினை கொண்டுடிருந்தார்கள்.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தை தடுக்க முடியாமல் போனவர்கள் யார் என்பது தொடர்பில் ஆராயவே விசாரணை ஆணைக்குழு முழு காலத்தையும் செலவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு ,தேசிய புலனாய்வு பிரிவினரது பலவீனம், தாக்குதல் சம்பவத்துக்கு சாதகமாக அமைந்தது என்பதை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற மறுகணமே நாட்டு மக்கள் அறிந்துகொண்டார்கள்.

தற்கொலை குண்டுத்தாரி சஹ்ரானின் பின்னணியில் இருந்தவர்கள் யார், என்பதையே கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எதிர்பார்த்தார்கள்.

பொதுஜன பெரமுன ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் பிரதான தேர்தல் பிரசாரமாக பயன்படுத்தி வெற்றியடைந்தார்கள்.

ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் உண்மையான குற்றவாளியை பகிரங்கப்படுத்வதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள. ஆனால் தற்போது ஏனைய வாக்குறுதிகளைப் போன்று ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் விவகாரமும் பொய்யாக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப்பெறவில்லை. ஆகவே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளோம்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பத்தை அரசியல் தேவைக்காக பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.