சமூக வலைதளங்களுக்கு வருகிறது தடை? ஆணைக்குழு பரிந்துரை….

ஜனாதிபதி ஆணைக்குழுவின் எச்சரிக்கை…..

இலங்கையில் சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகள் தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் குண்டு தாக்குதல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். தவ்ஹீத் மற்றும் வஹாபிசம் உள்ளிட்ட தீவிரவாத கருத்துக்கள் சமூக வலைதளங்கள் ஊடாகவே அதிகமாக இலங்கைக்குள் பரப்பப்படுவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், நாட்டில் சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகள் தொடர்பான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் வெவ்வேறு சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகளைத் தடுக்க ஒரு நாடு ஒரு சட்டம் என்ற விடயத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்கு தமது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.