க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்…. !
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் ஆரம்பமாகின்றன .
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6 இலட்சத்து 22,352 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன் , இன்று ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார் .
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருந்த பரீட்சை நாட்டில் நிலவிய கோவிட் வைரஸ் சூழ்நிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது .
இந்த நிலையில் இன்றிலிருந்து ஆரம்பமாகும் பரீட்சைகளுக்காக , பரீட்சை நிலையங்கள் முழுவதும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு முழுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 4513 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன் 542 இணைப்பு மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .