சிறுமியை சீரழித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர்.. உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரம்…!

இந்தியா…

இந்தியாவில் உள்ள உத்தர பிரதேச பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து , அதைப் ஒளி படமாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

ஒரு வருடமாக 17 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக Chandrama Rajbhar ( 24 ) ஞாயிற்றுக்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

பாதிக்கப்பட்ட சிறுமி Sukhpura பொலிஸில் புகார் அளித்ததையடுத்து , Chandrama மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டம் மற்றும் I.T சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .

சிறுமி , தனது புகாரில் , கடந்த ஒரு வருடத்தில் Chandrama Rajbha தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் , இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவித்தால் தனக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார் .

இதனைத் தொடர்ந்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் , மேலும் இது தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .