திருகோணமலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கையை – உடனடியாக நிறைவேற்றிய ஜனாதிபதி….

மாணவியின் கோரிக்கையை அமுல்படுத்திய ஜனாதிபதி…

திருகோணமலையில் பாடசாலை மாணவி ஒருவர் முன்வைத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக நிறைவேற்றியுள்ளார்.

திருகோணமலை , மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் கிவுலேகடவல வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற “ கிராமத்துடன் உரையாடல் ” நிகழ்ச்சித்திட்டத்தின் போதே இந்த மாணவி தனது கோரிக்கையை முன்வைத்திருந்தார் .

மாணவியின் கோரிக்கையின் பொருட்டு ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்திலேயே விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பணியை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார் .

அம் மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு இரண்டு மணி நேரத்திற்குள் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளது.