இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி..!

கொரோனா தடுப்பூசி..!

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் அறிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இந்த நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.