கார் கழுவிய குக் வித் கோமாளி புகழ்…வைரலாகும் உண்மை…!

குக் வித் கோமாளி புகழ்…

குக் வித் கோமாளி உள்ளிட்ட தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைவராலும் கவனம் பெற்றவர் புகழ். தற்போது பல படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது புதிதாக கார் வாங்கியிருக்கும் புகழ், இதுகுறித்து உருக்கமான விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

என்னுடைய தாத்தா, சித்தப்பா, மாமா என அனைவரும் ஓட்டுநர்களாக இருந்துள்ளார்கள். டிரைவிங் தொழில் வேண்டாம் என வீட்டில் சொன்னார்கள். அதையும் மீறித்தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். ஓட்டுதல், காரைக் கழுவுதல் போன்ற தொழில்களைச் செய்துள்ளேன். இன்று புதிய காரை வாங்கியுள்ளேன். இது ரசிகர்களால் மட்டுமே சாத்தியம். இது எல்லோருக்கும் ஊக்கமாக இருக்கும் என்பதால் தான் கூறுகின்றேன்.

என் தாத்தா, பாட்டனில் இருந்து என் பரம்பரையில் முதல் முதலாக காரை வாங்கியது நான் தான். என் வீட்டில் அம்மாவிடம் இதுபற்றி போன் பண்ணி சொன்னவுடன் அழுதுவிட்டார். குக் வித் கோமாளி குழுவிலும் நல்லவிதமாக எண்ணினார்கள். உதவி இயக்குநர்கள் கண்கலங்கினார்கள்.

எத்தனையோ வண்டிகளை வாட்டர் வாஷ் செய்துள்ளேன். வண்டியைத் துடைத்துவிட்டால் பத்து ரூபாய் டிப்ஸ் கொடுப்பார்கள். இன்று எனக்கென்று ஒரு சொந்த கார் உள்ளது, இதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் இல்லையென்றால் நான் இல்லை. உண்மையாக உழைத்தால் நீங்களும் இதுபோல கார் வாங்கலாம்.

நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டது தான் என் வெற்றிக்குக் காரணம். விஜய் தொலைக்காட்சியில் எல்லோரும் என்னைக் குழந்தை போலவே பார்த்தார்கள். எல்லோரும் ஆதரவளித்தார்கள். ஒரே வருத்தம், (நடிகர்) வடிவேல் பாலாஜி மாமாவின் இழப்பு தான். நான் ஜெயிக்க வேண்டும், வளர வேண்டும் என நினைத்தவர். எங்கிருந்தாலும் அவர் என்னுடன் தான் இருப்பார் என்று வருத்தத்துடன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.