திடீரென குறைந்த தங்கத்தின் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா..?

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி…

கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக , தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் , கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது.

கடந்த வாரம் சரிவாக இருந்த தங்கம் விலை, இந்த வாரத்தில் உயர்வடைய தொடங்கியது.

இந்த நிலையில், இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.34,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.76 சரிந்து ரூ.4,266க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசு குறைந்து ரூ.72க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறமைமயும் குறிப்பிடத்தக்கது.