இலங்கை தமிழரின் கண்ணீர் கதையை உலகறிச் செய்த புலம்பெயர் தேசத்து சிறுமி!! சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்..!

இலங்கை தமிழரின் அவலநிலையை சித்தரிக்கும் சிறுமியின் ஓவியம்…

அண்மையில் சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமியொருவர் வரைந்த ஓவியம் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது.அந்த சிறுமியின் ஓவியமானது ஈழத்தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர்க் கதைகள் ஒவ்வொன்றையும் காவியமாய் வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளது.

ஈழத்து தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் தேசத்திலுள்ள வங்கியொன்று தனது
19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்திரியாவின் தலைநகரில் நடத்தியது.

இதனை அடுத்து இப் போட்டியில், சுவிஸ் தேசத்தில் வாழும் சுமார் ஆயிரம் போட்டியாளர்கள் பங்குபற்றினர்.
இசையினைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்பதே இப்போட்டியின் தொனிப்பொருளாக இருந்தது .

இப் போட்டியில் ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த அபிர்சனா தயாளகுரு என்ற ஈழத்துச்சிறுமியும் மிக அழகாக தத்துரூபமான ஈழத்தமிழரின் கண்ணீர் கதைகளை ஒரு ஓவியமாக வரைந்து வெளிப்படுத்தியுள்ளார்.

இவ் ஓவியமானது சாதாரண வெற்றியுடன் நின்று விடாமல், முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த சிறுமிசிறுமியின் ஓவியம் பகிரப்பட்டு வருவதோடு அந்த சிறுமிக்கு ஈழத்தமிழர்களின் வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளது.