யாழில் தொடர் போராட்டம்.. சுகாதார பணியாளர்களின் கோரிக்கை….

யாழில் தொடர் போராட்டம்…

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (02) முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தை நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றும் தங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி முன்னெடுத்துள்ளனர்.

மேலும் சுகாதார தொண்டர்களுக்காண நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிற்கதியாக நிற்கும் சுகாதார தொண்டர்களாகிய தங்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு பல தடவைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதே வேளை சுகாதார பணியாளர்கள் தமது நியமனத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் என்றும் தமக்கு உண்மை நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் தமக்குரிய நியமனத்தை வழங்க வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.