யாழில் மீண்டும் தீவிரமாகப் பரவும் கொரோனா… இழுத்து மூடப்பட்ட சந்தை..!!

யாழில் மீண்டும்  தீவிரமாகப் பரவும் கொரோனா..

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று கொடிகாமம் பொதுச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த பொதுச் சந்தை இன்று (புதன்கிழமை) மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வடக்கில் நேற்றைய தினம் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் குறித்த வியாபாரியும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.