திடீரென மூடப்பட்ட தாஜ்மஹால்… உடனடியாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்…!

தாஜ்மஹால்….

சுற்றுலாப் பயணிகளை அதிகளிவில் ஈர்க்கும் தாஜ்மஹால் இன்று திடீரென தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்தியாவின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் வளாகத்திற்குள் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தின் பின்னர் வெடிக்கும் என்று உத்தரபிரதேச பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற அடையாளம் தெரியாத நபரின் தகவலின் பின்னர் தாஜ்மஹால் இவ்வாறு மூடப்பட்டதுன்,

அங்கிருந்த ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதனை அடுத்து பொலிஸார் பாதுகாப்புக் குழுக்களுடன் சென்று தாஜ்மஹால் வளாகம் முழுவதும் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் பொலிசாரின் சோதனை நடவடிக்கையின் போது எவ்வித வெடிபொருட்களும் மீட்கப்படாத நிலையில் தாஜ்மஹாலின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டு, மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடப்பட்டது.

இதனை அடுத்து போலியான வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான அழைப்பு குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.