மகள் கடத்திச் செல்லப்பட்டதால் தாய் ஒருவர் தூக்கிட்டு த .ற் .கொ .லை …!

மட்டக்களப்பில் தாய்யொருவர் த ற் கொ லை…

மட்டக்களப்பில்- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெல்லிக்காடு, தாந்தாமலை பகுதியில் தனது மகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தால் மனமுடைந்த தாயொருவர் தூக்கிட்டு த ற் கொ லை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் மாலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரு பிள்ளைகளின் தாயான ஏரம்பமூர்த்தி நிஷாந்தி (37 வயது) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு த ற் கொ லை செய்து கொண்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வருடம் உயர்தர பிரிவில் பரீட்சை எழுதிவிட்டு வீட்டில் இருந்த தனது மகளை அவரின் விருப்பமின்றி அப்பிரதேச இளைஞன் ஒருவர் திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கடத்தி சென்ற நிலையில், சம்பவத்தினை நினைத்து மனமுடைந்த நிலையிலேயே குறித்த தாயார் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக அருகில் இருப்பவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.