மன்னாரில் வீட்டு சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பலி..!

மன்னாரில் நடந்த கோர சம்பவம்…!

மன்னார்-மாந்தை மேற்கு பகுதியில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் இன்று (04) மதியம் வீடு ஒன்றின் சுவர் திடீரென இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடையவர் என கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும்தெரிய வருவது, இன்று (04) மதியம் 1:30 மணியளவில் வீடொன்றில் சுவரை இடித்து வேலை செய்து கொண்டிருந்த போதே குறித்த வீட்டின் சுவர் முற்றாக இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் இடிபாட்டிற்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் சிக்குண்டு சுவரின் இடிபாட்டில் இருந்து மீட்கப்பட்டு குறித்த இருவரும் உடனடியாக பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது சகோதரன் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.