யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுபாடு.. வைத்திய நிபுணரின் முக்கிய வேண்டுகோள்…!

யாழ் வைத்திய சாலையில் குருதி தட்டுப்பாடு …

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் மதுராங்கி அனைவரிடமும் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியிலுள்ள அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் குருதி கொடையாளர்கள் உயிர் காக்கும் பணிக்கு முன்வர வேண்டும் என வடபிராந்திய குருதி மாற்று பிரயோக வைத்திய நிபுணர் மதுராங்கி கிருஸ்ணபிள்ளை பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

வைத்தியசாலையில் அனைத்து வகையான இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. கொவிட் தொற்று காரணமாக நடமாடும் இரத்ததான முகாம்களை நடத்த முடியாமல் போனதால் நாடளாவிய ரீதியில் இரத்தம் சேகரிப்பில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால் கர்ப்பிணிப் பெண்கள், விபத்துக்களில் பாதிக்கப்படுவோர் மற்றும் புற்றுநோயாளர்களுக்கு வழங்குவதற்கு அதிக இரத்தம் தேவைப்படுகிறது.

இதற்கமைய 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 கிலோ உடல் நிறை உடையவர்கள் இரத்த வங்கியில் இரத்தம் வழங்க முடியும் எனவும். தேசிய குருதி மாற்று பிரிவு என்னும் இணையத்தளம் ஊடாக முற்பதிவுகளை செய்து குருதியை வழங்க முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.