ரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி…!

இலங்கைக்கு வரும் மற்றுமொரு தடுப்பூசி…!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொவிட் 19 தடுப்பூசியை நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசர தேவையின் போது பயன்படுத்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையகத்தின் நிபுணர் குழுவால் இந்த அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.