இலங்கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணம்…! நடத்தப்படும் தீவிர பரிசோதனை…!!

கோவிட் தடுப்பூசி பெற்ற இருவர் மரணம்…

கோவிட் தடுப்பூசியினை போட்டுக்கொண்ட இருவர் கம்பஹாவில் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது.

இந்த விடயத்தினை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த இருவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டதால்தான் உயிரிழந்தார்கள் என வெளியாகும் தகவல்களில் உண்மை கிடைாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் தடுப்பூசி பெற்றதன் பின்னர் ஏற்படுகின்ற உடல் நிலை மாற்றம், பக்கவிளைவுகள் பற்றி விசாரணை மற்றும் ஆய்வுகளை நடத்த சர்வதேச மட்டத்திலான முறைமையொன்று உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இந்த மரணங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வது அவசியமானதாகும்.

மேலும் இது தொடர்பிலான பரிசோதனை முடிவுகள் வெளிவரும்வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதனால் ஏற்பட்ட மரணமாக இது கருதமுடியாது என்பதே தங்களது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.