சுகாதார அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ரயிலுடன் மோதி கோர விபத்து..!

களுத்துறையில் கோர விபத்து…

களுத்துறை – கொஸ்கஸ் சந்திப்பகுதியில் நேற்றைய தினம்(4) பிற்பகல் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதில் பலர் காயமடைந்துள்ளனர்.

களுத்துறையிலுள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாப்பயணிகள் மீது பிசிஆர் சோதனை மேற்கொள்ளவென கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து சுகாதார பணியாளர்களைக் ஏற்றிச் சென்ற சொகுசுப் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பேருந்து களுத்துறையிலிருந்து மருதானை வரை பயணித்த ரயிலுடன் மோதுண்டுள்ளது.

விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்ததுடன் படுகாயமடைந்த பேருந்தின் சாரதி நாகொட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இப்பேருந்தில் 5 பெண்கள் உட்பட 12 பேர் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.