நாட்டில் கிழக்கு மாகாணத்தை நோக்கி வரும் வினோதமான வெளிநாட்டு பறவைகள்…

கிழக்கை நோக்கி வரும் பறவைகள்…!

கிழக்கு பகுதியில் மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக அப் பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பறவைகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அங்கிருந்து வரும் இப்பறவைகள் இப்பிரதேச மரங்களில் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து தமது குஞ்சுகளுடன் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று விடுவதாக பிரதேச வாசிகள் கூறுகின்றனர்.

இதனால் குறித்த பிரதேசங்கள் இந்த பறவைகளின் சத்தத்தினால் அருமையான சூழுலுடன் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.