மற்றுமொரு மர்மமான சடலம் மீட்பு..! நாட்டில் தொடர்ச்சியாக நடக்கும் கொலைகள்..!!

தேயிலை மலை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு…!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டம் சித்தரவத்தை பிரிவில் தேயிலை மலை பிரதேசத்தில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஆண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது எவராவது கொலை செய்தார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கண்டெடுக்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் 55 – 60 க்கு இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் உயிரிழந்த நபர் வெள்ளை சாரமும், மெருன் நிற ஷேட்டும் அணிந்துள்ளார்.

மேலும் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.