வவுனியாவில் வயலுக்கு சென்ற 7 வயது சிறுவன், மர்மமான முறையில் மரணம்…!!

வவுனியாவில் வயலுக்கு சென்ற சிறுவன் மரணம்…!

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமடுவ பிரதேசத்தில் 7 வயது சிறுவன் ஒருவனின் சடலத்தினை பொலிசார் நேற்றைய தினம் கைப்பற்றியுள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் நேற்று மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவன் வீடு சென்றிருப்பார் என்ற எண்ணத்தில் குறித்தபெண் வீட்டிற்கு போயுள்ளார்.

ஆனால் சிறுவன் வீட்டிற்கு செல்லாத நிலையில் பெற்றோர்கள் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து சிறுவனை தேடியுள்ளனர்.

இதனை அடுத்து வயல்பகுதியில் சிறுவன் விழுந்து கிடப்பதை கண்ட பெற்றோர்கள் அவனை உடனடியாக மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முன்றே சிறுவன் உயிரிழந்துள்ளார் என்று அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மருதமடுவ பிரதேசத்தை சேர்ந்த வீரசிறி தேனுகருக்சான் என்ற 7வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சிறுவன் பாம்பு தீண்டி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.