இலங்கையில் பிரபலமான நீர் மின் உற்பத்தி நிலையத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி..!

லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையத்தில் கொரோனா…

இலங்கையில் லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் ஊழியர்கள் 10 பேருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந் நிலையத்தில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே ஏனைய 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, மேலும் 140 ஊழியர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.