கிளிநொச்சியில் விபத்தில் இளம் பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் பலி…!

விபத்தில் பொலீஸ் உத்தியோகஸ்தர் பலி..

கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் பணியாற்றுகின்ற இளம் தமிழ் பொலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் குறித்த பொலீஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உத்தியோகத்தர் பரந்தன் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

அத்துடன் மேலும் குறித்த விபத்தில் 30 வயதான மேரிஜாக்சன் அன்ரனி என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.