க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்ட மோசடி செய்த மாணவர் ஒருவர் கைது..!

பரீட்சையில் மோசடி செய்த மாணவன் கைது…!

தற்போது நடைபெற்று வரும் 2020 ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலஸ்முள்ள பகுதியில் உள்ள பாடசாலையில், தனிப்பட்ட பரிட்சார்த்தியாக பங்கேற்ற மாணவன் ஒருவன், மற்றொரு மாணவனுக்காக பரீட்சை எழுதியுள்ளதாக பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவன் நேற்று வலஸ்முள்ள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் பரீட்சை எழுதியுள்ள நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைதான மாணவனை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வலஸ்முள்ள பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.