தனது Online வகுப்புக்காக தினமும் 5 கி.மீ பயணம் செய்யும் 6 வயது சிறுமி..! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கல்விக்காக தினமும் 6Km நடக்கும் சிறுமி…!

தனது Online வகுப்பிற்கு இணையத்தை பயன்படுத்த சிக்னல் இல்லாததால் 6 வயது சிறுமி ஒருவர் தினமும் 5 கிலோமீட்டர் வரை பயணம் செய்து கல்வி கற்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Covid-19 பாதிப்பு உலகம் முழுவதும் பல விடயங்களை மாற்றியமைத்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று மாணவர்களின் கல்வி முறையும் ஆகும்.

பள்ளிக்கு சென்று சக மாணவர்களுடன் பழகி செயல்முறை கல்வி கற்ற மாணவர்களை ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் ஒரு செல்போனுக்கு முன்பு கட்டிப்போட்டுள்ளது இந்த கொரோனா சூழல்.

தொடக்கத்தில் சாதாரணமான வார்த்தையாக இருந்த Online வகுப்புகள் இப்போது பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் வரை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Online வகுப்புக்கு ஸ்மார்ட்போன், அதிவேக இண்டர்நெட் வசதி எல்லாம் தேவை. ஆனால் அது அனைத்து வீடுகளிலும் கிடைப்பதில்லை.

அண்மையில் தெலுங்கானாவின் மஞ்சேரியல் மாவட்டத்தின் மோரிகுடாவில் உள்ள தனது பழங்குடி குக்கிராமத்தில் வசித்து வருபவர் 6 வயதான சரஸ்வதி . சிறுமியின் வீடு இருக்கும் பகுதியில் போதிய இணையவசதி இல்லாத காரணத்தினால் தனது Online வகுப்பிற்காக தினமும், 5 கி.மீ. பயணம் மேற்கொள்கிறார் இந்த சிறுமி.

சிக்னல் கிடைக்கும் பகுதியை அடைந்தவுடன் சாலையோரம் இருக்கும் மரத்தின் கீழ் அமர்ந்து தனது பாடத்தை கற்கின்றார்.

இந்த நிலையில் கல்விக்கு இணைய வசதியோ, தூரமோ ஒரு தடையாக எப்போதும் இருந்ததில்லை என கல்விக் கடவுளின் பெயர் கொண்ட இந்த 6 வயது சிறுமி நம் அனைவருக்கும் நிரூபித்துள்ளார் .