சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பொலிஸ் அதிகாரி கைது..!

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற பொலிஸ்…

பாடசாலை சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றச்சாட்டுக்காக நீலாவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடையவர் ஆவார்.13 வயது சிறுமியின் தாயாரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த பொலிஸ் அதிகாரி சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.