தனது 100-வது பிறந்தநாளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு கேக் வெட்டிய பெண்…!

இந்தியாவில்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனையடுத்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உடையவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மும்பையில் வசிக்கும் 100 வயது பெண் ஒருவர் தனது 100 வது பிறந்தநாளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணான பார்வதி கெட்கர் என்ற பெண் 1921-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதி பிறந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடும் அதே வேளையில் பந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதன் பின்னர், கேக்கினை வெட்டி தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கைகள் உயர்ந்து வருவதற்கு மத்தியில் வயதானவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் 1.94 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் 90,055 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 22 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரை கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிப்படைந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா தான் முதன்மையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.