மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் வெறித்தனமான செயல்… ஹோட்டலில் ஏற்பட்ட பரபரப்பு…!!

தமிழ்நாடு…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள ஹோட்டலில் சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஒரு நபர் சாப்பிட வந்துள்ளார். உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் திடீரென தண்ணீர் ஜக்கை எடுத்து வீசியுள்ளார்.

இதன் பின்னர் அங்கிருக்கும் சமையலறைக்குள் சென்று அங்குள்ள பாத்திரங்களை கலைத்து விட்டு ரகளையில் ஈடுபட்டார். அவரது நடவடிக்கைகளால் பயமடைந்த அங்கிருந்தவர்கள் ஹோட்டலை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த நபர் சமையலறையில் இருந்து ஒரு ஜல்லிக் கரண்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து சாப்பாட்டு மேஜைகளையும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினார். அதைப் பார்த்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு அங்கு கிடந்த கட்டைகளை எடுத்து வீசத் தொடங்கியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் மற்றும் போலீசாரை அந்த நபர் தாக்கியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பின்னர் ஒருவழியாக பொதுமக்கள் அவரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அதில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

இதனை அடுத்து போலீசார் அவரை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், பொதுமக்களைத் தாக்கியவர் புதுப்பாளையம் அருகே உள்ள வீரணந்தல் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான செல்வக்குமார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட என்றும் அதற்காக சில ஆண்டுகளாக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபர் சாப்பிடச் சென்ற ஹோட்டலில் திடீரென பொருட்களையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.