மனநிலை பாதிக்கப்பட்டவரின் மோசமான செயல்..!6 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்..!!

இந்தியா…

6 வயது சிறுமி ஒருவர் மனநிலை பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாஹ் பிரதேசத்தை சேர்ந்த 25 வயது நபர் ஒருவர் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனியாக கூட்டி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோத்வாலி போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய 25 வயது குறித்த நபரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பா மேலதீக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.