மன்னாரில் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவருக்கு கொரோனா…சற்று முன்னர் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொரோனா தொற்றுடன் த ற் கொ லை செய்த நபர்…!

மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (05) இரவு புகையிரதத்திற்கு முன்பு பாய்ந்து த ற் கொ லை செய்து கொண்டதாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் நேற்று (05) இரவு சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்திற்கு முன் பாய்ந்து த ற் கொ லை செய்துள்ளார்.

இந்த நபரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குறித்த சடலத்திற்கு இன்றைய தினம் (06) காலை பீ.சி.ஆர்.பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த சடலத்தின் பீ.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை நேற்று மாலை வெளியாகியது.

இந்த நிலையில் குறித்த நபருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் மன்னார் மீன் சந்தையில் மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.